சார்ள்ஸின் முறைப்பாட்டினூடாக வெளிப்படும் றிஷாதின் சேவைகள்

ஹபீல் எம்.சுஹைர்-

மிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவிடம் அமைச்சர் றிஷாதுக்கு சொந்தமான வர்த்தக அமைச்சின் கீழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கான நிதி மற்றும் மன்னார் பஸ் தரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

குறித்த நிதியானது அமைச்சின் றிஷாதின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமையே அவரது முயற்சிக்கு கிடைத்த பலன் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் முன் வைத்துள்ள குற்றச் சாட்டின் மூலம் இந் நிதிகளானது அமைச்சர் றிஷாதின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பது மேலும் உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த நிதிகள் தனது முயற்சியினால் கொண்டுவரப்பட்டதென சில மாற்று கட்சி அரசியல் வாதிகளின் பணிப்பின் பெயரிலும் அவர்களது ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிதியானது

அமைச்சர் றிஷாத் வர்த்தக அமைச்சை வைத்திருப்பவர். அவ் அமைச்சுக்கு மீள் குடியேற்றத்துக்கான பணம் ஒதுக்கப்படுகிறது. அமைச்சர் றிஷாதை மக்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றார்களோ அந்த கோணத்தில் அவரது சேவைகள் அமையப்பெறும் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாகும். அவர் மீள் குடியேற்ற அமைச்சறல்ல. ஆனால், மீள் குடியேற்றம் செய்வார். இப்படியானவர்களே உண்மையான தலைமைத்துவம் தாங்கும் பண்பு கொண்டவர்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அவர் மக்களுக்காக இந்த விடயங்களை முன்னின்று செய்கின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் முரண்படுகிறார். ஆனால், அமைச்சர் ஹக்கீமோ தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதையும் அவர்களுடன் விருந்துண்டு திரிவதையும் அவதானிக்க முடிகிறது. மக்களுக்காக சேவை செய்யும் எண்ணமில்லாது பணத்துக்காக செயற்பட்டால் இப்படி அமைச்சர் றிஷாதை போன்று செல்லுமிடமெல்லாம் முரண்பட வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் றிஷாத் மக்களுக்காக சிலரை எதிர்த்து எமக்காக முர்ணபடும் அமைச்சர் றிஷாத்தை நாம் பலமாக அணைத்துக்கொள்ள வேண்டிய கடமை உள்ளவர்களாக உள்ளோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -