பகிரங்க சேவையாளர்கள் பொறுப்புடன் பணியாற்றத் தவறினால் அடிப்படை உரிமை மீறலுக்கான விசாரணை செய்ய முடியும்



ப்துல் அஸீஸ் , பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

எமது நாட்டில் எந்தவொரு பகிரங்க சேவையாளரும் பதவிக்கான கடமைகளை செய்யும்போது இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் இணங்க விசுவாசமாக இருப்பேன் என்று பயபக்தியுடன் சத்தியம் செய்து பதவியை பொறுப்பேற்கின்றனர். இதே நேரத்தில் சிலர் சேவை நாடி வருகின்ற பொதுமக்களுக்கு அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்காமலும், தேவையற்ற ஆவணங்களைக் கோரியும் இழுத்தடிப்புக்களைச்; செய்து வருகின்றனர். பகிரங்க சேவையாளர்கள் பொறுப்புடன் பணியாற்றத் தவறினால் அடிப்படை உரிமை மீறலுக்கான விசாரணையை செய்ய முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

போரதீவுபற்று பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தினால் அதன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் நடராசா மோகனதாஸ் அவர்களின் தலைமையி;ல் வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தி;ல் (16.11.2017) நடைபெற்ற பகிரங்க சேவையாளர்களுக்கான செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்ட அஸீஸ் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

மனித உரிமைகள் பற்றிய கவலையீனமும் அவற்றை அவமதித்தலும்; அனேகமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. சட்ட ஆட்சி ஒன்றின் மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகின்றது. இன்று மக்கள் கூடியதான விழிப்புணர்வுகளைக் கொண்டுள்ளமையினால் பகிரங்க சேவையாளர் எவரும் சேவை வழங்கும் விடயத்தில் அசட்டையாக நடந்து கொள்ள முடியாது.

பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அரச உத்தியோகத்தர் ஒருவர் ஒரு குற்றத்தினைப் புரிந்துள்ளார் எனக் காணப்பட்டதன் பின் ஒழுக்காற்று நடைமுறையினை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு தொழில் வழங்குனர் குற்றம் புரிந்த உத்தியோகத்தர் மீது அவரால் எழுத்து மூலம் வழங்கப்பட்ட விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்காற்று தண்டனை வழங்க முடியும்.

வேலை கொள்வோருக்கும் வேலையாட்களுக்கும் இடையிலான உறவு சட்ட நோக்கில் ஒரு ஒப்பந்த உறவே ஆகும். அதிகாரம் இல்லாதவன் வேலையை இழந்தால் அவன் வாழ்வே இருள் சூழ்ந்ததாகிவிடும். இதனால் ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை மதிக்கும் அரசியல் முறைமையுள்ள நாடுகளில் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிருவாக நிறைவேற்றுத் துறையினர் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து பரிகாரம் பெறுவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -