மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா மாவட்ட செயலாளராக எம்.டி. புஸ்பகுமார் 27.11.2017. காலை கடமைகளை பெறுப்பேற்றார்.
வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய இவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாரை பிரதேச செயலாளராகவும் அம்பகமுவ பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய இவர் வவுனியா மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றினார்
சர்வமத வழிபாடுகளின் பின் கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வில் முன்னால் நுவரெலியா மாவட்ட செயலாளர் பி.ஜி குமாரசிரி வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



