அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி தங்கநகர் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் இன்று பிற்பகல் 12.00மணியளவில் (16) மோதியதில் வாகன சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான வாகனம் இரண்டும் விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்து குறித்து விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


