அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாக போட்டி

றியாஸ் இஸ்மாயில்-

கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான முன்ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான ஆராயும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனக் கூட்டம் அக்கரைப்பற்று ஆலம் நகர் காரியாலயத்தில் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவரும்,நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச சபைகளில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தெரிவு இக் கூட்டத்தில் ஓர் அங்கமாக இடம் பெறவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 0776962209 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -