மது அருந்­துதல்,­ பாடல்­கள் பாடு­தல் ஆகியவற்றுக்கு தடை விதிப்பு

ட கொரிய தலைவர் கிம் யொங் உன் மது அருந்­துதல் மற்றும் பாடல்­களைப் பாடுதல் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்ட கூட்­டங்­க­ளுக்கு தடை விதித்­துள்ளார்.

நாட்டு மக்கள் மீதான கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிக்கும் செயற்­பாட்டின் அங்­க­மா­கவே அவர் மேற்­படி நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்ளார். அவர் நேற்று முன்தினம் திங்கட்கி­ழமை தென் கொரிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு புல­னாய்வுத் தக­வல்­களை வழங்­கிய பின் உரை­யாற்­று­கையில் மேற்­படி தடைகள் குறித்து அறி­விப்பு செய்தார்.

“அவர் (வட கொரியத் தலைவர்) மது அருந்­துதல், பாடல் பாடல் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்ட கூட்­டங்­க­ளுக்கும் களி­யாட்­டங்­க­ளுக்கும் தடை விதித்­துள்­ள­துடன் வெளி தக­வல்கள் தொடர்­பான கட்­டுப்­பாட்டை பலப்­ப­டுத்­தி­யுள்­ள­ார்" என தென் கொரிய தேசிய புல­னாய்வு சேவை கூறு­கி­றது. வட கொரி­யா­வா­னது சில மாதங்­க­ளுக்கு முன் நில­விய கடும் வரட்­சி­யான காலத்தின் போது பையொங்யாங் பியர் பானத் திரு ­வி­ழாவை இரத்துச் செய்­தி­ருந்­தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -