கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மனு தொடர்பில் இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
இன்று குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
