தேங்காய்க்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஸீம் கிலாப்தீன்-

ந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய்க்கான உயர்ந்த பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்காயின் உயர்ந்த பட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் விலை 125 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

உயர்ந்த பட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவிக்கையில், புதன்கிழமையன்று கூடிய வாழ்க்கைச் செலவினக் குழுக் கூட்டத்தில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டதாகவும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மேலும் பல தீர்மானங்களை வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -