வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கி உள்ளே போட்டிருப்பார்கள் !

க்பி வீரர் வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசிஅழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கி உள்ளேபோட்டிருப்பார்கள் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனைகுறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் மத்தியவங்கியை துப்பரவு செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜீப் ரஹ்மான் தாஜூதீன் தாஜூதீன் என கூறிக்கொண்டுபாராளுமன்றுக்குள் இப்போதும் ஓடித்திரிகிறார்.

சுஜீவ சேனசிங்க ஹெக்டர் அப்புஹாமி அஜித் பி பெரேரா தயாசிறி ஜயசேகரபோன்றவர்கள் அர்ஜுன அலோசியஸ் முதலாளிக்கு தொலைபேசியில் உரையாடியவிடையங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தாஜுடீன் விடயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பாவது நான் எடுத்திருந்தால் என்னைதூக்கி எப்போதோ உள்ளே போட்டிருப்பார்கள் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

அண்மையில் தாஜுதீனை கொலை செய்தவரின் பெயரை தைரியமாக கூறுமாறு நான்பாராளுமன்றில் சவால் விட்ட போது அதற்கு பதில் அளிக்காமல் செய்தவர்களுக்கு அதுதெரியும் என சுஜீவ சேனசிங்க நழுவிச்சென்றார்.

அன்று தாஜுதீனை நாம் கொலைசெய்ததாக கூறி அரசியல் செய்தவர்கள் இன்றும்அதனையே செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -