அம்பாறையில் அரச வங்கியில் புகுந்து அச்சுறுத்தல் -தலைமையக பொலிஸில் முறைப்பாடு

ரச வங்கிக் கிளை ஒன்றின் முகாமையாளரை அச்சுறுத்தி கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை சம்பந்தமாக விசாரணை செய்யுமாறு அந்த வங்கியின் உயர் பீட முகாமை சபையினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவாக இருக்கலாம் என்று அறியப்பட்டுள்ள இந்தக் குழு அம்பாறை கிளையினுள் பலாத்காரமாக உள்நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக கிளை முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளரினால் இந்த அரச வங்கியின் உயர் பீட முகாமை சபைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சம்பவம் இடம்பெற்ற 20ம் திகதியன்று குறித்த கிளை முகாமையாளரினால் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தெ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -