யானையின் தாக்குதலினால் வீடொன்று முழுச் சேதம்

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட முதலியார் குளம் பகுதியில் நேற்றிரவு (19) காட்டு யானையின் தாக்குதலினால் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து பல கஷ்டங்களை எதிர் நோக்கி மீண்டும் சந்தோஷமான வாழ்க்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வேளை யானையின் தாக்குதலினால் வீடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பல வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருந்த போதிலும் தன்னுடைய விடா முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு உடைக்கப்பட்டதையடுத்து தனக்கு வாழ்க்கையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தார்.

காட்டு யானையின் பாதிப்புக்களை குறைப்பதற்கு யானை மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -