கல்வி, கலாச்சாரம் மற்றும் மார்க்கம் தொடர்பான விடயங்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க-ஜிம்மியத்துல் உலமா ஏறாவூர்





பைஷல் இஸ்மாயில் -

றாவூர் ஜிம்மியத்துல் உலமா சபையினருக்கும், நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயிலுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை நகர சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

எமது மர்க்கத்திற்கு எதிரான விடயங்களில் நாம் ஆதரவு வழங்காமல் அதனை தடுப்பதற்கு எங்களுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும், குறிப்பாக பெருநாள் தினங்களில் களியாட்ட நிகழ்வுகளை குறைத்து மார்க்கம் சார்பான நிகழ்வுகளை மிக்க கூடுதலாக நடாத்தி எமது மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.

அத்துடன் அனர்த்த காலங்களில் எமது பிரதேச மக்களை பாதுகாக்கின்ற விடயங்களிலும், கல்வி, கலாச்சாரம், சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களில் நகரை முன்னேற்றுவதற்காக நகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல வேலைத்திட்டங்களுக்கும் தங்களின் பரி பூண ஒத்துழைப்புக்களை வழங்க ஜிம்மயத்துல் உலமா சபையினர் எங்களுடன் கைகோர்த்து செயற்படவேண்டும் என்று நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் இதன்போது தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள், கல்வி, கலாச்சார விடயங்கள் மற்றும் மார்க்கம் தொடர்பான விடயங்கள் அனைத்துக்கும் தங்களின் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக ஜிம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.எஸ்.எம்.நிராஸ் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில், தலைவர் எம்.எஸ்.எம்.நிராஸ், செயலாளர் எஸ்.ஏ.நளீம், பொருளாளர் யு.எல்.அப்துல் ரஹீம் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -