புதிய வர்த்தமானியில் நகரசபை மக்களை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.


க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தலவாக்கலை நகரசபையிலிருந்து நுவரெலியா பிரதேசசபையான கொட்டகலை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 21.11.2017 அன்று மாலை 4.00 மணியளவில் குமாரகம பகுதியில் அமைந்துள்ள ஹொலிரூட் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக மேலதிகமாக மூன்று பிரதேச சபைகள் அதிகரிப்பட்டு அண்மையில் வரத்தமானியும் வெளியிடப்பட்டன. இந்த வர்த்தமானிக்கமைய குமாரகம, தெவிசிரிபுர, ரத்னிலகல ஆகிய கிராமங்கள் தலவாக்கலை நகரசபையிலிருந்து மாற்றம் பெற்று கொட்டகலையில் அமையவுள்ள பிரதேசசபைக்கே மாற்றம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

தங்களை மாற்றம் செய்வதனால் 20 கிலோமீற்றர் தூரம் தமது சேவைகளை செய்து கொள்ள வேண்டியுள்ளதாகவும், இதனால் தமக்கு நகர சபை ஊடாக கிடைக்கின்ற சலுகைகள் இல்லாது போவதாகவும், தங்களுடைய அன்றாட தேவைகள் கூட, குப்பை அகற்றல் காணி தொடர்பான விடயங்கள் உட்பட ஆவணங்களை பெற கொட்டகலைக்கு பிரதேசசபைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் தமக்குள்ள பெறுமதிமிக்க அசையா சொத்துக்களின் பெறுமதி குறைவதாகவும், இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் தாங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை நகரசபைக்கு சுமார் 3500 வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் நேரடியாக சலுகைகளை பெற்று வந்த சுமார் 1000 வாக்களர்கள் கொட்டகலை பிரதேச சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தாங்களை மாத்திரம் மாற்றுவதன் மூலம் தங்களது அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -