விடுமுறை பெராமல், முன்னறிவித்தல் இன்றி இராணுவத்தி் இருந்து இடைவிலகிய 28 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்களை நாடளாவிய ரீதியில் கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரால் ரொஷான் செனேவிரத்ன தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களுக்கான பொது மன்னிப்பு காலமானது நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.
வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலப்பகுதியில் 11 ஆயிரத்து 358 இராணுவர்கள் மீள சேவையில் இணைந்துள்ளனர்.
வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதியிலும் மீள இராணுவத்தில் இணையாதவர்களை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -