வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்....



க.கிஷாந்தன்-

ம்பகமுவ பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட போட்றி, எலிபடை, அயரபி தோட்ட மக்கள் 25.11.2017 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நோர்வூட் அயரபி சந்தியிலிருந்து எலிபடை தோட்டப்பகுதிக்கு செல்லும் சுமார் 5 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக பாவனைக்குதவாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் இத்தோட்ட பிரிவை சேர்ந்த 1000 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதை வெளிக்கொணர்ந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் அயரபி சந்தியில் முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நிரந்தர வீதியே எமது கோரிக்கை, தெற்கிற்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகம், போன்ற கோசங்களை எழுப்பியதுடன் வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வினை பெற்றுத்தராத நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இப் பிரதேசங்களில் தொழில் புரிபவர்களும் பாரிய அசௌகரியங்களுக்களாகி வருகின்றமையை ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த பிரதான வீதி பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதனால் தத்தமது வீடுகளுக்கு பிரதான நகர் பகுதியிலிருந்து பொருட்களை வாகனத்தில் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் மிக மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

எனவே தோட்ட நிர்வாகமும் இது தொடர்பில் கவனத்திற் கொள்ளாத பட்சத்தில் நம்பி வாக்களித்த அரசியல்வாதிகள் இத்தோட்டத்தின் நலனில் அக்கறை கொண்டு காலம் தாழ்த்தப்படாத நிலையில் குறித்த வீதியை செப்பனிட்டு தரும்படி ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -