திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை நேற்றிரவு (24) கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஐனூஷன் தெரிவித்தார்.
கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து சோதனைகளை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா 2 கிலோ 100 கிரேம் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை.ஆனந்தபுரி 02 வது ஒழுங்கையைச்சேர்ந்த துரை ராஜா கிருபை ராஜா (41வயது) மற்றும் அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த யோகானந்தன் அமிர்த சேகரன் (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவுடன் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
