ஹஸ்பர் ஏ ஹலீம்-

தம்பலகமம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹிஜ்ரா நகர் பகுதியில் இன்று(25) அதிகாலை ஆட்டுப்பட்டிக்கு இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக ஆட்டுப்பட்டி உரிமையாளர் தம்பலகமப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இதன்போது ஐந்து ஆடுகள் இறந்துள்ளதாகவும் ஆட்டுப்பட்டி முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது ஆட்டுப்பட்டி உரிமையாளர் அதிகாலை 3 மணியளவில் வெளியில் சிறுநீர் கழிக்கவந்தவேலையிலேயே தீப்பற்றுவதை கண்டதாகவும் பின்னர் அதனை அனைக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
