காரைதீவு நிருபர் சகா-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விவசாயச்செய்கைக்கான அரச உர மானியக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு மேற்கொண்டுவருகின்றது.
காரைதீவு கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட நான்கு கண்டங்களிலுள்ள 1079 எக்கர் (4316ஹெக்ரேயர்) விவசாயக்காணிகளுக்கான உரமானியக்கொடுப்பனவு 53லட்சத்து 95ஆயிரம் ருபா வழங்கப்படவிருக்கிறது என காரைதீவுப்பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு சிதம்பரநாதன் தெரிவித்தார்.
இதன்மூலம் 353 விவசாயிகள் நன்மையடையவிருக்கின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வளைந்தவட்டை கிழல்கண்டத்திலுள்ள 739 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 62விவசாயிகளும் வளைந்தவட்டை மேல்கண்டத்திலுள்ள 128 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 106 விவசாயிகளும் வெட்டுக்காடு காரக்கொல்லைக்கண்டத்திலுள்ள 125 ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 107விவசாயிகளும் பூரான்புரிக்கண்டத்திலுள்ள 105ஹெக்ரேயர் காணிஉரிமையாளர்களான 98விவசாயிகளும் இவ்உர மானியத்தைப்பெற விருக்கிறார்கள்.
இவர்களுக்கான உரமானியக் கொடுப்பனவு மக்கள்வங்கியினூடாக 191 விவசாயிகளுக்கு 2987500ருபாவும் இலங்கைவங்கியினுடாக 127விவசாயிகளுக்கு 1875500ருபாவும் பிரதேசஅபிவிருத்தி வங்கியினுடாக 29விவசாயிகளுக்கு 443750ருபாவும் தேசிய சேமிப்புவங்கியினூடாக 6விவசாயிகளுக்கு 106250 ருபாவும் விரைவில் வழங்கப்படவிருக்கிறதென காரைதீவுப்பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் மேலும் தெரிவித்தார்.

