கட்டிட திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்






க.கிஷாந்தன்-

ட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் செனன் தமிழ் மகா வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 19.11.2017 அன்று நடைபெற்றது

வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ரொபட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல், அட்டன் கல்வி வலயப்பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 40 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை ஆறுமுகன் தொண்டமான் திறந்து வைத்ததோடு, பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசில்களும், பதக்கங்களையும் வழங்கி வைத்தார். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -