கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசின் அதிகமான ஆதரவாளர்களை கொண்டு காணப்பட்ட செம்மண்ணோடை பிரதேசத்தில் இடம் பெறுகின்ற அனேகமான பொது நிகழ்வுகளில் கல்குடா அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலி தொடர் பிரதம அதிதியாக கலந்து கொள்வதனை அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறித்த பிரதேசத்தில் மாற்றத்தை நோக்கிய அரசியல் கலாச்சாரம் என்ற ரீதியிலும்இ சமூகத்தில் இருந்து வெளிப்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் அடிப்படையிலும்இ அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு திருப்பத்துடனான பாரிய ஆதரவு செம்மண்ணோடை பிரதேசத்தில் அதிகரித்து வருகின்றமை எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் செம்மண்ணோடை பிரதேசத்தில் ஆசனத்தினை கைப்பற்றும் நிலை உறுதியாகி விட்டது என பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
றோஸ் முன்பள்ளி வெளியேற்று விழா சம்பந்தமான கலந்துரையாடலில் முக்கியமான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் அமீர் அலியினை பிரத அதிதியாக கொண்டு வரவேண்டு என்ற கருத்தினை இன்று மாலை 24.11.2017 தெரிவித்திருந்தனர்
அத்தோடு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பக்கத்தில் இருந்து செம்மண்ணோடையில் பிரதேச சபை தேர்தலில் களமிறக்கப்படவுள்ள ஐ.எல்.சம்மூன், சமூக ஆர்வலர் சாட்டோ மன்சூர், கராத்தே மாஸ்ட்டர் கபூர், லெத்தீப் ஹாஜியார், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலளர் அமீர், கல்வி அபிவிருத்தி குழு தலைவர் ஜிப்ரி, சாட்டோ விளையாட்டு கழக தலைவர் நஜீமுதீன், பொருளாதார உத்தியோகத்தர் முஸம்மில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யின் வட்டார குழு செயலாளர் நவாஸ் மெளலவி, முன்பள்ளியின் இஸ்தாபகர் தலைவர் தங்க ஷாஹிப், குபா பள்ளியின் செயலாளர் ஜெமீல் ஆசிரியர்,சிறுவர் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஜனாப் பரீட் , பாரி ஜும்மா பள்ளிவாயலின் தலைவர் மீராஷாஹிப் ஹாஜியார் ஆகியோருடன் இன்னும் பல முக்கியஸ்தர்களும் முக்கியமாக கலந்து கொண்டமை பிரதி அமைச்சர்அமீர் அலிக்கு செம்மண்ணோடை பிரதேசமானது கோட்டையாக மாறும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி விட்டதனை போல் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
