சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை விரைவுபடுத்தக் கோரி சாய்ந்தமருதில் இன்று 2017.11.24 - வெள்ளிக்கிழமை மாலை மாட்டு வண்டில் பேரணி நடாத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனைசெய்திருந்தது.
இப்பேரணியானது சாய்ந்தமருதின் அனைத்து பிரதான வீதிகளிலும், கடற்கரை வீதியிலும் வலம் வந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த வண்டில் பேரணியில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை விரைவாக பிரகடணப்படுத்துமாறுகோரும் வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரசியல் தலைவர்களே! எங்கே உங்கள் வாக்குறுதி,போலி வாக்குறுதி அளிக்க எங்கள் ஊசுக்குள் வராதே!, எல்லைப்பிரச்சினை இல்லாத எங்கள் ஊருக்கு தனியான உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு, அமைச்சரே! கெடுக்காதே எங்கள் நகர சபையை.நல்லாட்சி அரசா? வெறும் சொல்லாட்சி அரசா?, எங்கள் சபையைத் தந்துவிட்டுமீதியை விரும்பியவாறுபிரித்துக்கொள், இனியும் கூட்டம் நடத்தி ஏமாற்றாதே, பிரதமரின் வாக்கு வெறும் புஷ்வானமா?, எங்களுக்கான சபை கிடைக்கும் வரை தொடர்ந்துபோராடுவோம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாட்டு வண்டியில் சென்றவர் தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.


