மருதமுனையில் வடிகான்களால் சுகாதாரச் சீர்கேடு



மருதமுனை,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்-

ருதமுனையில் வடிகான்களால் சுகாதாரச் சிர்கேடு ஏற்பட்டுள்ளது.கழிவு நீர் வழிந்தோட கட்டப்பட்ட வடிகான்களால் கழிவு நீர் சரியாக வழிந்தோடாததால் நீர் தேங்கி நின்று சுகாதாரச் சிர்கேடு ஏற்பட்டுள்ளது.மருதமுனையில் நிருமானிக்கப்பட்டுள்ள பல வடிகான்களின் நிலை இவ்வாறே காணப்படுகின்றது.பல வடிகான்கள் உடைபட்டு தேசமடைந்த நிலையில் பொது மக்கள் குப்பைகளையும்,கழிவு எச்சங்களையும் கொட்டும் ஒரு இடமாக வடிகான்கள் மாறியுள்ளது.

மருதமுனையிலும்,சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மக்கள் குடியேறியிருக்கும்; மஸ்ஜிதுல் இஸ்லாம் நகர்,65 மீற்றர் வீட்டுத்திட்டம்,பிரஞ்சிட்டி வீட்டுத்திட்டம் போன்றவற்றை இணைக்கும் முக்கிய வீதியாகக் காணப்படும் மஸ்ஜிதுல் இஸ்லாம் வீதியே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது.மழைக்காலங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் பாதுகாக்கவுமே இந்த வடிகான்கள் அமைக்கப்பட்டள்ளது.

ஊரிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரினை வெளியேற்றி மருதமுனையின் மேட்டுவட்டைப் பகுதியோடு இணைந்த வழியாக கடலுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு பிரதான வடிகானாக இவைகாணப்படுகின்றது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த வீதியினைச் சுற்றியும் குடியிருப்புக்களும்,அதனை அண்டிய பகுதியில் பாடசாலைகள்,பிரதேச வைத்தியசாலை மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் என்பன காணப்படுகின்றது.

வீதியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இவ்வடிகானின் சில பகுதிகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதோடு உடைபட்ட பகுதியினுள் சிலர் குப்பைகளையும், எச்சங்களையும் கொண்டு கொட்டுவதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகின்றது.மாணவர்களும் பொது மக்களும் இவ்வழியால் பயணம் செய்வதற்கு சிரமப்படுகின்றனர். அத்தோடு இவ்வாறு நீர் தேங்கி நிற்பதனால் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு போன்ற அபாயகரமான தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடையம் தொடர்பில் சம்பந்தப்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -