தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து இளைஞர் கழக செயற்பாடுகளில் முன்மாதிரியாக திகழும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுகின்றது
அந்த வகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இந்தியா கல்கத்தாவில் ஆரம்பமாகவிருக்கும் சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்திற்க்கு இலங்கையில் இருந்து 12 பேர் அடங்கிய குழாமினர் பயணமகின்றனர். இக்குழுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் இளைஞர் வலையமைப்பின் பிரதேச சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தை சேர்ந்த கனேசன் இளையராஜா என்பவர் பங்குப்பற்றுகின்றார்..
