அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் தெஹியத்தகண்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தெஹியத்தகண்டி பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம். றிபாஸ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்ட சிங்கள பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.எஸ்.எம். ரஊப், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தகண்டிய பிரதேச செயற்பாட்டாளர்கள், பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இப்பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுத்திறணை மேம்படுத்துவதற்கு ஏதுவாக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பிரதி அமைச்சர் ஹரீசினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் நகர திட்டமிடல் அமைச்சினால் மலசல கூடம் அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த பயணாளிகளுக்கான காசோலையினையும் பிரதி அமைச்சர் இதன்போது வழங்கிவைத்தார்.