கல்முனை மீதொட்டுமுல்லையும் விசர்நாய் வளர்க்கும் கல்முனை மாநகர சபையும்,




ல்முனை மீதொட்டுமுல்லையும் விசர்நாய் வளர்க்கும் கல்முனை மாநகர சபையும், டெங்குவைக் காப்பாற்றும் சுகாதாரப் பணிமனையும்

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குற்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதானா வீதிக்கு வடக்கே குளக்கரைய அண்மித்து அமைக்கப்பட்டுள்ள வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்பட்டுள்ளது. இதனால் வடிகாண்களில் நீர் வழிந்தோடாமலும் டெங்குநோய் பரவுவதற்கான அறிகுறிகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

குறித்த இப்பாதையானாது பொலிவெரியன் கிராம சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லும் பாதையாகவும் கற்பிணித்தாய்மார்கள் சுகாதார வைத்திய பணிமனைக்குச் செல்லும் பாதையாகவும் பிராந்திய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபைக்குச் செல்லும் பாதையாகவும் மற்றும் கமநல அலுவலகத்திற்குற்ச் செல்லும் பாதையாகவும் காணப்படுகின்றது.

குப்பைகள் அதிக அளவில் காணப்படுவதால் இவ்வீதியில் விசர் நாய்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வீதி அங்காங்கே கொங்றீட் இடப்பட்டு பூரணப்படுத்தப்படாமலும் சகிக்க முடியாத துர்நாற்றமுடையதாகவும் பதசாரிகள் வாகணங்கள் எதுவும் இதனூடாக பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.

மேலும் வீதிக்கு அருகில் உள்ள குளத்தில் சல்பீனீயா தாவரங்கள் அதிகம் காணப்படுவதால் நீர் வடிந்தோடாமல் தேங்கி நிற்கின்றது. சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்களில் இக்குளமும் இக்குப்பைகளும் படாமல்போன மர்மமும் என்ன?

இப்பிரதேசத்தில் முறையற்ற வகையில் இயங்கும் அரிசி ஆலை ஒன்றின் மூலமும் இப்பிரதேசம் அதிகளவில் மசுபடுத்தப்படுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பேராபத்தில் இருந்து மக்களையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

(ஓரிரு புகைப்படங்களே இங்கு பிரசுரித்துள்ளோம் நிலமை தொடரும் எனின் அனைத்து புகைப்படங்களும் வெளிவரும்)

AAN Aashiq
Sainthamaruthu
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -