50 வருடங்களுக்கு மேலாக யார் யார் நகரசபை எல்லைக்குள் அங்கம் வகித்தார்களோ அவர்களில் கால் வாசி பங்கினர் பிரதேசசபை எல்லைக்குள் இணைத்துக்கொள்ளவுள்ளனர்.
இது திட்டமிட்டு செய்யப்படுகின்றதா? அல்லது தற்செயலாக நிறைவேற்றப்படவுள்ளதா என்பது தெரியவில்லை இவ்வாறான சூழலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே இதுதொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை சட்ட ரீதியான தீர்வை பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
19.11.2017 மத்திய மாகாண கல்வி அமைச்சினால் 45 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டினால் அட்டன் செனன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து அங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய,இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன்,மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பி.சக்திவேல்,கனபதி கனகராஜ் உட்பட பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர், மாணவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான்
1998 ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ,எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி;.ரட்ணாயக்க,ரேனுகா ஹேரத் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேசசபைகளை உருவாக்க வேண்டும் என அன்றைய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அன்று ரேனுகா ஹேரத் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தமையினால் அது தொடர்ச்சியாக இழுபறி நிலையில் இருந்து வந்தது. இதற்கு சிலர் இன்று கூறுகின்றார்கள் இதை வைத்து கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பெயரை போட்டுக்கொண்டது என. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை நாங்கள் எதற்கும் பெயர் போட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எமது சமூகத்திற்கு என்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும் அதுவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது.
தற்போது 50 வருடங்களுக்கு மேலாக யார் யார் நகரசபை எல்லைக்குள் அங்கம் வகித்தார்களோ அவர்களில் கால் வாசி பங்கினர் பிரதேசசபை எல்லைக்குள் இணைத்துக்கொள்ளவுள்ளனர்.இது ஒரு தனிபிரச்சினை இல்லை ஒரு சமூக பிரச்சனை எனவே இதற்கான முழுமையான தீர்வை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார்.