மு.இராமச்சந்திரன் -
நட்டஈடுகோரி முன்னெடுக்கப்படும் சத்தியாகிரக போராட்டம் 29.11.2017 இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது
கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய போட்லேன்ட் நீர் மீன் உற்பத்தி நிலைய பணியினால் நீர்கதிக்குள்ளான 33 குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குடியிருப்பாளர்கள் 28.11.2017 முதல் சத்தியாகிரகபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
போட்லேன்ட் மின் உற்பத்தி நிலையத்திற்கருகிலே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் வினியோகிக்கும் சுரங்கப்பதை நிர்மாணப்பணிகளினால் அப்பகுதியை சேர்ந்த 33 குடும்பங்கள் வெளியோற்றப்பட்டதுடன் தற்காளிகமாக குடியிருக்க வாடகை மாதாந்தம் 30 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நட்டஈடுகோரி பாதிக்கப்படோர் ஆர்பாட்டமொன்ற மேற்கொண்ட நிலையில் மின்சாரசபையினால் இரண்டு மாத கால அவகாசம் கோரியதையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது
இரண்டு கால அவகாசம் 25.11.2017 நிறைவடைந்த நிலையில் மேலும் ஒருமாதகாலம் அவகாசம் கோரி மீண்டுமொறு கடிதம் பாதிக்கப்படோருக்கு வழங்கப்பட்டுள்ளது
சத்தியாகிரக போராட்டத்தையடுத்து கினிகத்தேன பொலிஸாருக்கும் நீர் மின் உற்பத்தி நிலைய வேலைத்திட்ட அதிகாரிகளுக்கும் இடையில் 28 ம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மேற்படி நட்டஈடு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து மேலும் பல தகவல்கள் பெற்றுகொள்ள வேண்டியுள்ளதால் ஒருமாதம் கால அவகாசம் தேவைப்படுவதாக வேலைத்திட்ட பணிப்பாளர் கலாநிதி கமால் லக்சிரி தெரிவித்துள்ளார்
எனினும் வேலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளமையினால் நட்டஈடு கிடைக்கும் வரை தாம் தொடர்சந்த்திதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்






