திருகோணமலை:சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது தேசிய உச்சி மாநாடும் பூர்த்தி விழாவும்









ஹஸ்பர் ஏ ஹலீம்-

சுதந்திர ஊடக இயக்கத்தின் 25 ஆவது தேசிய உச்சி மாநாடு நேற்று(21) காலை கொழும்பு 07 ல் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காம நிறுவனத்தில் மங்கள விளக்கேற்றலுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்போது தமிழ் பேசும்,சிங்கள மொழி ஊடகவியலாளர்கள் ,செயற்பாட்டாளர்கள்,கொள்கை வகுப்போர் ,கல்விமான்கள்,புத்திஜீவிகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் எனப்பலரும் பங்கேற்றனர்.

சமூக பொறுப்புணர்ச்சியுடன் கூடிய சுதந்திர ஊடக கலாசாரம் எனும் தொனியில் இவ் உச்சி மாநாடு அமைந்தது.இதன்போது கடந்த கால ஊடகவியலாளர்களின் புகைப்படக் கண்காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பல்வேறு வகையான ஊடக தொழில்சார்,ஊடகவியலாளர்கள் நலன் பாதுகாப்புத்திட்டம் உட்பட விரிவான கலந்துரையாடல்கள் கேள்விகளுக்கான விடைகளையும் உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர்,பத்திரிகை ஆசிரியர்கள் தங்களது விளக்கபூர்வமான விடயங்களையும் முன்வைத்தனர்.

மேலும் இதன்போது சுதந்திர ஊடக இயக்கத்தின் விசேட திட்டமடங்கிய ஊடகவியல் அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -