நிலாம்டீன்-
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பொது வாசிகசாலை முன்பாகவுள்ள பிரதான நெடுஞ்சாலையில் நாளாந்தம் மீன் வியாபாரிகள் தங்களது மீன் வாகனத்தை பாதையின் மஞ்சள் கோட்டுக்கு மிக அருகாமையில் நிறுத்தி தங்களது வியாபாரத்தை செய்து வருவதால் நாளாந்தம் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியம் அடைந்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தில் மற்றுமொரு சட்ட மீறலாக பிரதான பஸ் நிறுத்துமிடத்தை பிடித்துக்கொண்டு நாளாந்தம் மீன் வியாபாரம் செய்து வருவதால் பிரயாணிகள் மிகவும் அசௌகரியம் அடைகின்றார்கள்.மற்றும் பஸ் வண்டி ஓட்டுனர்கள் உரிய பஸ் நிறுத்துமிடத்தில் நிறுத்த முடியாமல் வேறு இடத்தில் பஸ் வண்டியை நிறுத்த வேண்டியுள்ளது. நாளாந்தம் இது நடந்து வருகின்றது.
நாளாந்தம் இந்த இடத்தில் மீன் வியாபாரம் களை கட்டுவதால் அட்டாளைச்சேனை பொது வாசிகசாலை முன்பாகவுள்ள நெடுஞ்சாலையில் மஞ்சள் கோட்டை தாண்டியே துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் கடக்க வேண்டியுள்ளது.
பாதையின் மஞ்சள் கோட்டுக்கு மிக அருகாமையில் மீன் வியாபாரம் நடை பெறுகின்ற போது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் பைக் ஓட்டுனர்கள் மஞ்சள் கோட்டுக்குள் தங்களது வாகனத்தை நிறுத்திக்கொண்டு மீன் கொள்வனவு செய்வதால் அவ்விடத்தில் நாளாந்தம் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
அதனால் குறித்த இடத்தில பல வாகன விபத்துக்களும் நடந்து வருகின்றன.மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் குறித்த இடத்தை கடந்து செல்ல முடியாது நாளாந்தம் பெரும் அசௌகரியம் அடைந்து வருகின்றார்கள்.
மீன் வியாபாரிகளுக்கு தங்களது வியாபாரத்துக்கு தங்கு தடையின்றி போதுமான இடவசதிகள் வாசிக சாலைக்கு முன்பாக உள்ள போதிலும் போட்டி போட்டுக் கொண்டு மஞ்சள் கோட்டுக்கு அருகாமையில் நடக்கும் இந்த அத்துமீறல் மற்றும் சட்ட மீறல் தடுக்கப்பட வேண்டும்..
நாளாந்தம் வியாபாரத்துக்கான வரியை அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் நாளாந்தம் இந்த மீன் வியாபாரிகளிடம் அறவிட்டு வருகின்ற போதிலும் பஸ் தரிப்பிடத்தை பிடித்துக் கொண்டு நாளாந்தம் நடைபெற்று வரும் இந்த சட்டமீறலை தடுக்க முடியவில்லை.
அத்துடன் அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரிகளும் இந்த சட்டமீறலை கண்டு கொள்வதில்லை. நாளாந்தம் குறித்த இடத்தில் அக்கரைபற்று பொலிசார் நின்று கொண்டு வாகன போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரிகளின் கவனத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கவனத்திக்கு