அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அக்/ அல் முனீறாவுக்கு திடீர் விஜயம்


கே.சி.எம்.அஸ்ஹர்-

24.10.2017 நேற்று அக்கரைப்பற்றின் புதிய வலயக்கல்விப்பணிப்பாளர் அஹமட் வெல்வை அவர்கள் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள அக்/ அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.இவ்விஜயத்தின் போது பாடசாலை பௌதீக வளம் ,ஆளனி வளம் போன்ற பிரச்சிரனகள் தொடர்பாக பாடசாலை முகாமைத்துவ குழுவனருடனும் , பாடசாலை, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினார்.

அதிபர் எம்.எ.எம்.றஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.பி.கபூர் ஹாஜியார்,கலாநிதி ஏ.ஜீ.அனீஸ்,எம்.எ.சபுஹர் போன்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வலயக் கல்விப்பணிப்பாளர் ,பாடாலையின் நிருவாகம், கவின் நிலை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் போன்றவற்றைப் பாராட்டிப் பேசினார்.மேலும் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பித்தல்,தரம் 05 புலமைப்பரிசில் பெறுபேற்றை மேம்படுத்தல் க.பொ.த.(சா-த) ,(உ-த) அடைவு மட்டத்தை உயர்த்தல், வாகன தரப்பிடத்தை அமைத்தல் தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியதுடன் பாடசாலை தேவைகளை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்தார்..

வலயக்கல்விப் பணிப்பாளரின் முதல் பாடசாலை தரிசிப்பாக இது அமைந்திருந்தது. பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திக் குழு போன்றோரின் மிகவும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடைபெற்ற சிறந்த சந்திப்பாக இது அமைந்திருந்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -