மாகாண ஆட்சி இருந்தபோது குறை கூறிய நீங்கள் இன்று யாரை குறை கூறப்போகின்றீர்கள்.


எம்.ரீ. ஹைதர் அலி-
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றபோதும் 2017.10.20ஆந்திகதி - வெள்ளிக்கிழமை மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகளவானவர்கள் வெளிமாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்களில் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அனைவரையும் தனது ஆட்சியில் எமது கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்து அதனை நிறைவேற்றியும் காட்டியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எங்கள் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றது எங்கள் மாகாணத்திற்குரியவர்களை எங்கள் மாகாணத்திற்கே ஆசிரியர்களாக நியமியுங்கள் என்று வேறெங்கும் கேட்டுச் செல்லவில்லை. உங்களுடன் இருக்கின்ற மத்திய அரசாங்கத்திலுள்ள கல்வி அமைச்சர் அதன் செயலாளர் ஆகியோரிடம்தான் விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களிடம் மன்றாடி எமது கிழக்கு மாகாணத்திற்கு நியமனங்களை பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால், கிழக்கு மாகாணத்தினை ஆட்சி செய்வதற்காக மக்கள் வழங்கிய 5 வருடம் முடிவுற்ற நிலையில் 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்கள் அதிகளவானவை வெளி மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசாங்கத்திலுள்ள நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இருந்தால் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களைப்போல் இவ்வருடமும் (2017) கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணங்களில் வெற்றிடங்களாகவுள்ள பாடசாலைகளுக்கு ஆசரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பர்.

ஒரு மாகாணத்தினுடைய முதலமைச்சருக்கு இவ்விடயம் சாத்தியப்படுமாக இருந்தால் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உங்களால் மாத்திரம் ஏன் சாத்தியப்படாது. வெறுமெனே பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும் அறிக்கைகள் மாத்திரம் விடும் அறிக்கை மன்னர்களா நீங்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

முதலமைச்சர் எங்களை எதனையும் செய்ய விடுகின்றார் இல்லை அவர் எங்களுக்கு முற்றுக் கட்டையாக இருக்கின்றார் என்று அவர் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நீங்கள் அனைவரும் குறைகூறி திரிந்தீர்களே. இன்று உங்களுக்கு முற்றுக் கட்டையாக இருப்பவர் யார்..? இதிலிருந்தே விளங்கிக் கொள்ள முடிகின்றது. உங்கள் அனைவரினதும் அரசியல் வங்குரோத்தினை.

மத்திய அரசாங்கத்திலுள்ள நீங்கள் அனைவரும் இவ்வாறுதான் மற்றவர்களின் மீது குறைகூறி இதே போன்றுதான் எம்சமூகத்தினை உங்கள் அரசியல் வங்குரோத்துக்காக முட்டாள்களாக ஆக்கிக்கொண்டிருக்கின்றீர்கள்.

இன்றைய கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியின் தேவைப்பாடு இன்று வழங்கப்பட்டுள்ள கல்வியற் கல்லூரி ஆசிரிய நியமனங்களிலும், இதுவரை காலமும் உங்களால் விடப்பட்ட வெற்று அறிக்கைகள் மற்றும் பொய் வாக்குறுதிகளையும் வைத்து அறிந்துகொள்ள முடிகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -