வாகரைப் பிரதேச செயலகத்துக்கு பிரதேச செயலாளரை நிரந்தரமாக நியமிக்குமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் கடந்த 5 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி உதவிப் பிரதேச செயலாளரைக் கொண்டு இயங்கி வருகின்றது.

இதேவேளை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கடந்த சுமார் 4 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி பதில் பிரதேச செயலாளரின் கீழ் இயங்கி வருகின்றது.

மேலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், வாகரை பிரதேச செயலகம், ஆகியவையும் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக பிரதேச செயலாளர்களின்றி உதவிப் பிரதேச செயலாளர்களின் கீழ் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மேற்படி பிரதேச செயலகங்களுக்கு பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பொது நல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதேவேளை பிரதேச செயலாளர் இல்லாத மற்ற மூன்று பிரதேச செயலகங்களிலும் உதவிப் பிரதேச செயலாளர்கள் நிரந்தரமாக கடமை புரிந்து வருகின்ற போதிலும் வாகரைப் பிரதேச செயலகத்தில் வாரத்தில் 3 தினங்கள் மாத்திரமே உதவிப் பிரதேச செயலாளர் கடமையாற்றுகின்றார்.

இப்பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளரும் வாரத்தில் இரு தினங்கள் குறித்த மணித்தியாலங்கள் கடமையிலிருப்பதால் தமக்கு குறைந்தபட்சம் உதவிப் பிரதேச செயலாளரையாவது நிரந்தரமாக நியமிக்குமாறு வாகரைப் பிரதேச மக்கள் சார்பாக தாம் வேண்டுகோள் விடுப்பதாக கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
#வாகரை
#காணி
#பிரதேச செயலகம்
#பிரதேசசெயலாளர்
#மட்டக்களப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -