கல்வி அமைச்சின் கல்வித்தணைக்களம் நடாத்தும் சமுகவிஞ்ஞானப் போட்டியின் தரம் பத்து பிரிவில் கல்முனை வலயத்தின் காரைதீவுக்கோட்டத்தைச்சேர்ந்த காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலை மாணவி செல்வி சகாதேவராஜா டிவானுஜா கிழக்கு மாகாணமட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை கல்முனை மாவட்டங்களுக்கான கிழக்கு மாகாணமட்டப்போட்டியானது கடந்த மாதம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் காரைதீவு மாணவி சகாதேவராஜா டிவானுஜா முதலிடம்பெற்றுள்ளார். இவர் ஏலவே ஆங்கிலதினப்போட்டி தமிழ்மொழித்தினப்போட்டி ஆகியவற்றிலும் திறமைகாட்டிவருபவராவார்.
இதேவேளை தரம் 11இல் காரைதீவைச்சேர்ந்த காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலை மாணவி செல்வி நளிராஜ் சங்கவி மாகாணமட்டத்தில் முதலிடம்பெற்றுள்ளார்.
இவர்களுக்கான தேசியமட்டப்போட்டி இன்று (16) சனிக்கிழமை களுதாவளை மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.