இவ்வரசானது முஸ்லிம்களுக்கு எதிரானநிலைப்பாட்டையே எடுக்கின்றது.

அ. அஹமட் -

ன்று முஸ்லிம்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்தை எடுத்து நோக்கினாலும் இவ்வரசானது முஸ்லிம்களுக்கு எதிரானநிலைப்பாட்டையே எடுக்கின்றது. மியன்மார் விடயத்திலும் அதுவே நடந்தேறியுள்ளது. Sltj இன் கண்டனப் பேரணியில்தலையிட்ட நீதிமன்றம் பேரினவாதிகளின் கண்டனப் பேரணி விடயத்தில் எந்தவித தலையீட்டையும்செய்திருக்கவில்லை. குறைந்தது இவ்வரசானது இருவருக்கும் தடையுத்தரவை அல்லது பூரண அனுமதியை வழங்கிநடுநிலை பேணியிருக்கலாம். Sltj இற்கு ஒரு நீதியும் பேரினவாதிகளுக்கு ஒரு நீதியும் கடைப்பிடித்ததிலிருந்து, நடுநிலையில் இருந்து விலகு பேரின வாதிகளுக்கு ஆதரவுப் போக்கை கடைப்பிடிப்பதை துல்லியமாக்குகின்றது.

அது மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் மியன்மார் நாட்டவர்களுக்கான விசாவையும்இவ்வரசு தடை செய்துள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் மியன்மார் அகதிகள் உள்ள நிலையில், இலங்கையில் மியன்மார் அகதிகள் இல்லை என கூறும் நிலையில் இலங்கை அரசின் நிலை உள்ளது. வடகொரியாவிடயத்தில் கண்டன அறிக்கை விடும் இவ்வரசால் மியன்மார் விடயத்தில் வாய் திறக்கவும் முடியவில்லை. இதுவெல்லாம் இவ்வரசு பேரினவாதிகளை திருப்தி செய்ய முனைவதை எடுத்துகாட்டுகிறது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இனவாதிகளோடு சேர்ந்து கூப்பாடு போடாமல், மியன்மார் மக்கள் இல்லையெனகூறியதன் மூலம் முஸ்லிம்களுக்கு சார்பான போக்கை கடைப்பிடித்துள்ளமையை பாராட்டியேயாகவேண்டும்.மியன்மார் மக்களுக்கு மியன்மார் நாட்டில் கூட குடியுரிமை இல்லை. அவர்களுக்கு எவ்வாறு விசா இருக்கமுடியும்? இப்படியான நிலையில் அதனை கூட தடை செய்வதன் மூலம் இவ் அரசின் இனவாத சிந்தனையின் அளவைமட்டிட்டுக்கொள்ளச் செய்யலாம்.

இவ்வரசை தான் முஸ்லிம்கள் வரிந்து கட்டிக் கொண்டு வாந்தார்கள். இதற்கு முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -