ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தின் குறைபாடு...









முர்சித் வாழைச்சேனை-

ட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் அமீர் அலி விளையாட்டு அரங்கு பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியினால் கட்டப்பட்டு 2010 ஏப்ரல் 03ம் திகதி திறந்து வைக்கப்பட்ட விளையாட்டு மைதானமாகும்.

இம்மைதானம் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய இரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்குமாக இருக்கும் ஒரேயொரு பொது விளையாட்டு மைதானம் என்றால் அதுமிகையாகாது.

இம்மைதானம் தற்போது மின் உபகரணங்கள் தேசமாக்கப்பட்டும், மலசல கூடங்கள் பாவனைக்கு உதவாத நிலையிலும், கட்டடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டும், கட்டடங்களில் காணப்படும் குழாய் உடைந்த நிலையிலும், மைதானத்தில் பாரிய வாகனம் செலுத்தி மைதானம் சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இம்மைதானம் உரிய பராமரிப்பு அற்ற நிலையில் உள்ளதுடன் பிரதேசத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் கவலை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

இக்குறைபாடுகள் தொடர்பாக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கருத்து தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் காணப்படும் விளையாட்டு அரங்கை அசிங்கமாகவும், அலங்கோலமாகவும் வைத்திருக்கின்றது. அத்தோடு உடைந்த நிலையிலே விளையாட்டு அரங்கு காணப்படுவது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால் இங்குள்ள தளபாடங்களுக்கு வாய் இருந்தால் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம், இதனை வடிவமைப்பதற்கு எத்தனை இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம் என்ற வரலாறுகளை கூறும். விளையாட்டு மைதானத்தை பார்க்கின்ற பொழுது பாரிய வாகனங்கள் செல்லப்பட்டு காணப்படுகின்றது. இவ்வாறான குறைபாடுகளை எங்களால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது. கல்குடாப் பிரதேசத்தில் இருக்கின்ற விளையாட்டுக் கழங்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரம் தான் விளையாட்டு மைதானத்தை தேசியத்திலே சிறந்த விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கான முனைப்புக்களை செய்ய முடியும்.

விளையாட்டு அரங்கை திறந்த வைக்கும் போது மண்டபத்தில் பல மின்குமிழ்கள் காணப்பட்டது. ஆனால் தற்போது மின்குமிழ்கள் அற்ற மண்டபமாக காட்சியளிக்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையில் இருக்கின்ற அதிகாரிகள் இம்மைதான விடயம் தொடர்பாக பாராமுகமாக இருந்திருக்கின்றார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

இவ்விடயமாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட விளையாட்டு மைதானத்தில் காணப்படும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் விளையாட்டு அரங்கில் காணப்படும் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்படும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -