ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் ; இறக்காமம், மானிக்கமடுவில் பதற்றம் - அமைச்சர் நஸீர் விரைவு

சப்னி அஹமட்- 

இறக்காமம் மானிக்கமடு பிரதேசத்தின் இன்று காலை முதல் மாலை வரை சில சிங்கள புத்தர்களும், சிங்களவர்களுக்கும் இணைந்து தமிழ் நபரிடம் இருந்து காணி ஒன்றைக் கொள்வன்வு செய்து அதனுள் சில சுத்த நடவடிக்கைகளையும் அவர்களுக்கான அமைவிடங்களையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்ட விரோதமாக இன்று (02.09.2017) மேற்கொண்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் மேற்கொண்டு குறித்த மத அமைப்பின் பிரதிநிதிகளுடனும், பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அங்கு நடைபெற இருந்த வேலைத்திட்டங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இது தொடர்பாக நேரடியாக ஜனாதிபதியின் கவனதிற்கொண்டு வருவதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடந்து குறித்த பதற்ற நிலை அமைதியான நிலைக்கு திரும்பியதுடன் இது தொடர்பான விரிவான ஆராய்வுகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதுடன், அங்கு பெளத்த நபர்களால் மேற்கொள்ளவிருந்த செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது;

இதன் போது, சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -