அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்



கில இலங்கை சமாதான நீதிவானாக பிரபல தொழிலதிபர் தேசகீர்த்தி, தேசபன்து, லங்காபுத்ர நடராஜா சத்தியசீலன் கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதி நீதிவான் டி.எம்.டி.சீ. பண்டார முன்னிலையில் 20.09.2017 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

கொழும்பு -15, முகத்துவாரம், அலுத்மாவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இரத்மலானை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அத்துடன், லயன்ஸ் கழகத்தின் கொழும்புக் கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், மட்டக்குளி ‘பீச் பார்க்’ அமைப்பின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் ஆவார். 

இவர் முகத்துவாரத்தைச் சேர்ந்த நடராஜா மற்றும் அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும் ஆவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -