பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் - சம்பந்தன்

அப்துல்சலாம் யாசீம்-
க்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

'உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் மக்களின் சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே நாம் இன்று அனைத்துக் கட்சிகளினதும் முக்கியமாக மக்களின் சம்மதத்துடன் இந்த புதிய அரசியல் சாசனத்தினை ஏற்படுத்த முனைகின்றோம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெறுவதுடன் மக்களது அங்கீகாரத்துடன் இப்புதிய அரசியல் சாசனத்தினை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாட்டில் நிரந்தரமானதும் உறுதியானதுமான சமாதானத்தினை அடைய முடியும்' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -