யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - பொலிஸ் மா அதிபர் நேரடி விஜயம்

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொலிஸ் உத்தியோகர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நேற்று(31) யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென வந்துள்ளதுடன் அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து தாக்குதலாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -