நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைத்தோட்டத்திலே (புலோரன்ஸ்) 21.08.2017 காலை சடலம் மீட்டகப்பட்டுள்ளது. தனது பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக மட்டுகொட்டகையில் வாழ்ந்து வந்த 65. வயதுடடைய ஆர் ராமையா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மனைவி கொழும்பில் பணி புரிவதாகவும் இரண்டு மகன் மற்றும் மகள் ஒருவருமாக முவர் உள்ள நிலையில் இரண்டு மகன் மாரும் திருமணம் முடித்து தனியாக சென்றுள்ள நிலையில் மகள் விழிபுலனற்றவர் எனவும் தெரியவந்துள்ளது மூன்று பிள்ளைகளினதும் ஆதரவு அற்ற நிலையில் சில காலமாக மாடு வளர்ப்பு கொட்டகையிலே வாழ்ந்து வந்துள்ள நிலையில் கொட்டகைப்பகுதியில் துர்நாற்றம்வீசிய நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே இறந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது
சடலத்தை பிரேத பரிசோணைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணையை அரம்பித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


