முஸ்­லிம்­க­ளின் முக­வர்கள் தொடர்புதான் பெரிய பிரச்சினை - நாமல்

இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளுடன் முக­வர்கள் மூலம் தொடர்பை பேணி­யதால்தான் முஸ்­லிம்கள் எம்மை பற்றி சரி­யான தெளிவை பெற­வில்லை என அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்‌ஷ குறிப்­பிட்டார்.

திரு­கோ­ண­மலை மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமா சபை தலைவர் மௌலவி கலா­நிதி நஸார் தலை­மையில் கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எம்­மிடம் இருந்து ஆட்­சியை பறிக்க மேற்­குலகம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்­லிம்கள் சிக்­கிக்­கொண்­டனர். அதை இப்­போது அவர்கள் உண­ரு­கின்­றனர்.எம்மை சந்­திக்கும் முஸ்­லிம்கள் மூலம் நான் இதனை அறிந்­து­கொள்­கிறேன்.

அன்று மூதூர், கிண்­ணியா, காத்­தான்­குடி பிர­தே­சங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் விடு­தலை புலி­களால் கொலை­ செய்­யப்­பட்­டனர். இந் நிலையில் சுமார் முப்­பது வருட கொடூர யுத்­தத்­திற்கு நாம் முற்­றுப்­புள்ளி வைத்தோம். எமது அர்ப்­ப­ணிப்பு கார­ண­மாக வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இன்று சுதந்­திர காற்றை சுவா­சிக்­கின்­றனர்.

அது தவிர எமது காலத்தில் வடக்கு கிழக்கில் வர­லாறு காணாத பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை நாம் மேற்­கொண்டோம்.வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மக்­க­ளுக்­காக கேட்ட அனைத்து அபி­வி­ருத்­தி­க­ளையும் நாம் செய்­து­கொ­டுத்தோம். மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­திகள் தொழில் வாய்ப்­பு­க­ளுக்கும் பஞ்சம் இருக்­க­வில்லை.ஆனால் இன்று என்ன நடக்­கி­றது என்­பதை மக்கள் அறிந்­து­கொண்­டுள்­ளார்கள்.

தற்­போது முஸ்­லிம்கள் எம்மை சந்­திக்­கி­றார்கள்.எமக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக உறுதி அளிக்­கி­றார்கள்.முன்பு விட்ட தவறை நாம் இனிமேல் விடமாட்டோம்.முஸ்லிம் மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணி அவர்கள் எமக்குள்ள நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -