டெனிஸ்வரனிடமுள்ள அமைச்சுப் பதவியை விந்தனுக்கு வழங்க உயர்பீடம் முடிவு..!

பாறுக் ஷிஹான்-
டக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்க டெலோவின் உயர் பீடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பரிந்துரைக்கவுள்ளது. முதலமைச்சருக்கு எதிராகச் செயற்பட்டதன் மூலமும் நீதிவிசாரணைக்குழு முன் தோன்ற மறுப்பதன் மூலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் டெலோ சார்பில் வடக்கு மாகாண அமைச்சராகவுள்ள பா.டெனிஸ்வரன் கட்சியின் முடிவுகளை மீறியிருந்தார். 

இந் நிலையில், கடந்த வாரம் டெலோவின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் வடமாகாண சபை அமைச்சராகவுள்ள பா. டெனிஸ்வரன் இழந்து விட்டதைக் தெரிவித்து முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். அக் கடிதத்திற்குப் பதிலளித்த முதலமைச்சர், அமைச்சர் டெனிஸ்வரன் தமது விசாரணைக்குழு முன் தெரிபடமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு பல காரணங்களை முன்வைத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப் பதில் கடிதத்தில் முதலமைச்சர் டெலோவின் செயலாளருக்குப் பதிலளித்திருந்தார்.

இது பற்றி ஆராய்வதற்காகவும் முடிவுகளை எட்டுவதற்காகவும் டெலோவின் அரசியல் உயர்பீடம் வவுனியாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கட்சியின்; தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியிருந்தது. கூட்டத்தில் டெலோவின் அரசியல் உயர் பீடத்தினைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களில் எட்டுப்பேர் கலந்துகொண்டனர். அரசியல் உயர்பீட உறுப்பினர்களான செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா, உப தலைவர்களான இந்திரகுமார் பிரசண்ணா, கென்றி மகேந்திரன், தேசிய அமைப்பாளர் கே.சிவாஜிலிங்கம், நிதிச் செயலாளர் விந்தன் கனகரட்ணம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோரே கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், வடக்கு மாகாண சபையில் டெலோ சார்பில் நிலவுகின்ற அமைச்சுப் பதவிக்கு புதிய ஒருவரை வட மாகாண அமைச்சராக நியமிப்பதற்கான முடிவு எட்டப்பட்டது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவுள்ள விந்தன் கனகரட்ணத்திடம் அமைச்சர் டெனிஸ்வரன் வகிக்கும் அமைச்சையும் அதற்குள் உள்ளடங்கும் பொறுப்புக்களான, வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி விடயங்களை மறுதல்கள் இன்றி வழங்க முதலமைச்சரைக் கோருவது எனவும் கட்சியின் அரசியல் உயர்பீடம் முடிவு எடுத்துள்ளது.

இம் முடிவினை விரைவில் டெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா உத்தியோகபூர்வமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு விரைவில் கடிதமூலம் அறிவிக்கவுள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கடந்த 32 வருடங்களாக தொடர்ச்சியாக டெலோவில் அங்கம் வகித்து வருகின்றார். டெலோவின் நிதிச் செயலாளராக அங்கம் வகிக்கும் இவர் ஏற்கனவே யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக 4 வருடங்களும் அதற்கு முன்னர் 5 வருடங்கள் வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினராகவும் மக்களுக்குச் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -