காலாவதியான உப்பு பொதிகள் திகதி மாற்றி விற்பனை - நீதிமன்றத்தில் வழக்கு

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நகரத்தில் காலாவதியான உப்பு பொதிகளை திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பாவனையாளர் அதிகார சபையினர் இன்று (17) சுற்றிவளைப்பினை மேற்கொண்டு உப்பு பொதிகளை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட 900ற்கும் மேற்பட்ட உப்பு பொதிகளில் பொதி செய்யப்பட்ட திகதிக்கு மேலால் புதிதாக காலாவதியாகும் திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உப்பு பொதிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக உப்பு பெகட்டுக்களை வழங்கிய பிரதான உற்பத்தியாளர்களை கண்டு பிடித்து விளக்கம் கோரப்படவுள்ளதாகவும். கைப்பற்றப்பட்ட உரிமையாளர் திருகோணமலையில் மொத்த வியாபாரம் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது. காலாவதியான உப்பு பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.

இதேவேளை திருகோணமலை நகரம் மட்டுமல்லாது அனைத்து கிராமங்களுக்கும் சென்று சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -