”புதுசுகளாகும் பழசுகள்” அட்டாளைச்சேனையில் கலாசார விழா -

எம்.ஜே.எம்.சஜீத் -

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் ஏற்பாடு செய்துள்ள ”புதுசுகளாகும் பழசுகள்” கலை, கலாசார, கவின் விழா எதிர்வரும் சனிக்கிழமை (08) மாலை 4மணிக்கு அட்டாளைச்சேனை றகுமானியாபாத் கடற்கரைப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது என மன்றத்தின் ஊடகப் பேச்சாளரும், அதிபருமான எம்.எஸ்.எம்.பைறூஸ் இன்று (04) தெரிவித்தார்.

இக்கலாசார விழா கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிவான் அல்-ஹாபில் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா விஸ்வரத்தினம் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பிரதேச செயலாளர்கள், கலாசாரா உத்தியோகத்தர்கள், உலமாக்கள் மற்றும் கல்வியியலாளர்கள் என பலர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை சைக்கிள் ஓட்டம், தோணி ஓட்டம், இயந்திரப் படகு ஓட்டம், ஆகிய போட்டி நிகழ்ச்சிகளும், மாலை நேர நிகழ்வுகளாக கிறாஆத், அதான், பொல்லடி, நாட்டார் பாடல், இஸ்லாமிய கீதம், மாட்டு வண்டி ஓட்டம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இப்போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று நிலைகளைப் பெறுபவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள் வழங்கப்படுவதுடன், அன்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அல்-இபாதா கலாசார மன்றம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த 6வருடங்களாக புனித ரமழான் மாதங்களில் உள்ளுர், வெளியூர் உலமாக்களைக்கொண்டு ஹதீஸ் மஜ்லீஸ் நிகழ்வுகளை நடாத்தி வருவதுடன், புனித நோன்பு, ஹஜ் பெருநாட்களை முன்னிட்டு கலாசார போட்டி நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -