ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவூதி இளவரசர் இலங்கை விஜயம் முதலீடு செய்வது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விசேட பேச்சுஆர். ஹஸன்-
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவூதி இளவரசரை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெ;ய்யித் மசூர் மௌலானா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர். 

சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழுவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட அரச உயர்மட்ட சந்திப்புக்களையும் - பேச்சுக்களையும் நடத்தவுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் முதலீடு செய்வது குறித்து விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -