கறுப்புக் கிளாஸும்
கன்றாவி ஷெல்பியும்
கிறுக்குப் பேச்சும்
கேண 'ஞான'மும்
female ஐடியும்
பெரிதாய் லைக்ஸும்
நாமலின் டாடியும்
'நாம் ஒறு தாய் மக்கலும்'
சிங்களப் பாட்டும்
சிங்கிள் மெட்டும்
திங்கள் கிழமையும்
தீராத புளக்கும்
தமிழ்ப்பட ஹீரோவும்
தங்கச்சி சாவதும்
குத்துப் பாட்டும்
கோவண ஆட்டமும்
கொமிஷன் பணமும்
கொந்தராத்து வேலையும்
கமிஷன் போடுவதும்
காலாவதி ஆகுவதும்
குஞ்சுக் கரப்பத்தானும்
கூச்சலிடும் பெண்களும்
பிஞ்ச சொக்ஸும்
பெரிய பதவியும்
கடற்கரைப் பார்ட்டியும்
கண்ணாடி போத்தலும்
சுடச்சுடப் பாணும்
சொதிக்குள்ள பருப்பும்
கவர்மண்ட் OPDயும்
கடு கடு டொக்டரும்
பவர் பேங் வாங்குவதும்
பழுதாகிப் போவதும்
இப்படிப் பலவும்
இணைந்து இருந்தே
எப்பவும் காண்பதால்
இதனை எழுதினேன்.
