அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு...!

க.கிஷாந்தன்-
ரச வைத்திய அதிகாரிகள் சங்கம், 25.07.2017 அன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். வைத்திய பீட மாணவ செயற்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தும், சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 25.07.2017 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தாதிமார்களாலும் வைத்திய கடமை மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர். மேலும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

நுவரெலியா, அட்டன் டிக்கோயா, லிந்துலை, கொட்டகலை, டயகம, அக்கரப்பத்தனை போன்ற வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -