மத்திய மாகாணசபையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தனித்துவத்துடன் செயற்பட முடிவு




நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -


த்திய மாகாணசபையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் தனித்துவத்துடன் செயற்பட முடிவு
மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறுபேர் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று மத்திய மாகாணசபையின் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.

மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களில் தலைவராக எம்.ராம் , செயலாளராக திருமதி சரஸ்வதி சிவகுரு , கூட்டணியின் அமைப்பாளராக ஆர். ராஜாராம் , இணைத்தலைவர்களாக சிங்.பொன்னையா , எம்.உதயகுமார் , சோ.ஸ்ரீதரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மத்திய மாகாணசபையின் ஆளுத்தரப்புடன் இணைந்து செயற்படுகின்ற அதே வேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியாக ஒன்றிணைந்து பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தக்கூட்டணியின் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -