பெகோ இயந்திரத்தில் சிக்குண்டு பெண் மரணம்..!

அப்துல்சலாம் யாசீம்-
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வாகல்கட பகுதியில் சீனா கம்பனியினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற யான் ஓயா திட்டத்தில் வேலையாற்றி வந்த பெண்னொருவர் இன்று (26) பெகோ இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் வாகல்கட- டி 01 பகுதியைச்சேர்ந்த ஜீவனி குமாரி சந்ரதாஷ (37வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பெண் யான் ஓயா குளக்கட்டு நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை பெக்கோ இயந்திரத்தினால் போடப்பட்டு வருகின்ற மண்ணில் காணப்படுகின்ற மரத்தின் வேர்களை அகற்றி வந்த போது தவறுதலாக பெக்கோ இயந்திரத்திற்குள் சிக்குண்டதாகவும் அதனையடுத்து காயமுற்ற நிலையில் டி-04 பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

விபத்துடன் தொடர்புடைய பெக்கோ சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -