பள்ளிவாசலுக்கு முன் வந்து நின்ற பெளத்த பிக்குகளைப்பார்த்து உசாரடைந்த முஸ்லிம்கள்- விபரம்

அஹமட் பயாஸ்-

ன்னிக்கு -02-06-2017 இப்ப மஃரிப் தொழுதுட்டு வெளியே வரும் போது பள்ளிக்கு முன்னால் ஒரு வேன் நிறுத்தி இருந்தது. அதில் ஒரு ஆரேழு பௌத்த பிக்குகள் உட்கார்ந்திருந்தனர். இப்போ தொழுதுட்டு வெளியே வார அம்புட்டு பேரும் கூடி கூடி கதைச்சிட்டு இருக்கானுங்க. 

அதிலும் இங்கால ஒருத்தன் "இன்னிக்கு நான் செத்தாலும் சரி, பள்ளிக்கு கை வைக்க உட மாட்டேன்" என ஜிஹாத் பிரகடனம் செய்ய, அங்கால ஒருத்தன் யார் யாருக்கோ கோல் எடுத்து "மச்சான் பள்ளிக்கிட்ட போத்தினவங்க வந்தீக்காங்க, எதுக்கும் "சாமான்" ஐ ரெடி பண்ணி வை" என அனல் பறக்க கட்டளை இட்டுட்டு இருக்கான். 

திடீரென்று பள்ளியிலிருந்து ஒரு மனுசன் தொழுதுட்டு வர வேனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு ஹாமுதுரு அவரைப் பார்த்து "மல்லி, ஆகம கடயுது இவரத?" (தம்பி,மார்க்க வேளை முடிஞ்சா?" ஒவ் ஹாமுதுருனே,அபி யமு ( ஆமாம் ,நாங்க போவோம்) பிறகு அந்த மனுசன்ட விசாரித்துப் பார்த்தால் அவர்ட வாகனத்துல பிக்குகள் ஒரு குழு ஹயர் வந்தாங்களாம், 
இனி ஒங்கட நோம்பு மாசம் என்பதால பள்ளில நிறுத்தி, நோம்பையும் தொறந்துட்டு தொழுதுட்டு வரும்படி அந்த பிக்குகளே இவர்ட சொன்னாங்களாம். 

இந்த கூத்தையெல்லாம் பார்த்துட்டு வீட்டுக்கிட்ட வரும்போதே கட்டார்ல இருந்து IMO இல் ப்ரண்ட் ஒருத்தன் கோல் பண்றான் "என்ன மச்சான்? ஊரில் பிரச்சினையாமே? அவங்கட பெரிய ஆக்கள் ஒரு வேனுக்கு கத்தி பொல்லோட வந்தாமே?

" எவன்டா சொன்னது இந்த சமூகத்திற்கு ஒரு ஊடகம் தேவை என்டு, 
அதான் நாங்க எல்லாரும் இருக்கிறோமே ஒன்றை ஒம்பதாக்கி சொல்ல?? நன்றி: viduthalainews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -